என் இதய தெய்வத்திற்கு ஓர் அஞ்சலி

A tribute to my mother 

என் இதய தெய்வத்திற்கு ஓர் அஞ்சலி

உறங்கினாலும் விழித்தாலும்

ஊர்கள் தோறும் அலைந்தாலும்

மறக்க மறுப்பது உன் முகமே

அன்னை உந்தன் திருமுகமே

ஈருடல் ஓருயிர் என்றே நான் நினைத்திருந்தேன்

உயிர் பிரிந்து உடல் இயங்கும் விந்தை கண்டு கலங்கி நின்றேன்

சிறு அடியும் தாங்காத என்னை பேரிடிதாங்கி ஆக்கி சென்றாய்

எல்லா உறவுகளும் துச்சமேன்றெண்ணி

உன் உறவே போதுமென வாழ்ந்த்திருந்தேன்

இறுதி வரை கை பிடித்து வருவாய் என நினைத்திருக்க

நடுவழியில் மறைந்து என்னை நடுகடலில் விட்டுச்சென்றாய்

கரை காணாமல் தவிக்கிறேன்

வடபழனி எனும் அரண்மனையில், சிவப்பு நாற்காலி என்ற சிம்மாசனத்தில்அமர்ந்து  20 வருடங்கள் ஆட்சி செய்தாய்

அது செங்கோலா, சர்வாதிகரமா என்பது இல்லை சர்ச்சை

ஆளுமை உனக்கு கை வந்த கலை

அடங்கி போதல் நான் விரும்பி ஏற்ற நிலை

உண்மைய கூட உரக்க பேச பயந்த எனக்கு

பொய்யை கூட அடித்து நிருபித்த நீயே என் வாழ்வின் கதாநாயகி

தலைக்கு சாயம், வாயில் பல் செட் என

முதுமையை மறைக்க முயன்று தோற்ற பலர் நடுவில்

அடர்த்தியாய் பறக்கும் வெள்ளை கேசமும், பொக்கை வாய் சிரிப்பும்,

உன் அழகை கண்ட பின்னே , ஐய்ஸ்வர்யாராய் கூட அடுத்தபடிதான்,எனக்கு

கடின உழைப்பால் எல்லோரையும் கவர்ந்து இழுத்தாய்

பாசத்தால் எங்களை கட்டி போட்டாய்

உன் நினைவு மறந்திட இன்னுமோர் ஜென்மம் வேண்டும்

உன்னை பற்றி பேசிட ஏழு பிறவிகள் எடுத்திட வேண்டும்

“பிச்சு” என உனை அழைத்து, போதும் என்ற புறங்கையில்அன்னமிட்டு, செல்லமாய்  உன் கன்னம் கிள்ளி, வேண்டாவெறுப்பாய் உன் கால் நகம் களைந்து………………

இப்படி லட்ச கணக்கில் நான் செய்த சிறு சிறு விளையாட்டுகள்

இனி செய்யும் வாய்ப்பு எப்போதும் எனக்குண்டோ?

“அம்மா” என இனி நான் யாரையும் அழைக்க வழியுண்டோ?

உன் போல் வாழ்ந்தவரும் இல்லை

உன் போல் மறைந்தவரும் இல்லை

என சரித்திரம் படைத்திட்டாய்

உன் விருப்பபடி இறுதிவரை வாழ்ந்திட்டாய்

இன்னொரு பிறவி எனக்கு வேண்டாம்

இல்லை கட்டாயம் உண்டெனில்

எனக்கு நீ மகளாய் பிறக்க வேன்டும்

என் ஒருதலை அன்புகடலில் நீ திளைக்கவேண்டும்

எங்கள் கண்ணீருக்கு சக்தி இருந்தால் அவை உன் திருவடிகள் சேரட்டும்

நீ பொழியும் ஆசி மழையில் எங்கள் தலைகள் நனையட்டும்

உன் அன்பு பந்தங்கள் சார்பில்………….

என்றும் உன் நினைவுடன்……….

பாப்பி a ரங்கநாயகி

March-2011

 

Advertisements

5 thoughts on “என் இதய தெய்வத்திற்கு ஓர் அஞ்சலி

  1. Hello Ranganayaki,

    This is Sampath here from Chennai. I did not get many opportunities to move with your parents. I knew your father to be very energetic and well informed. Your Kavithai on your Amma opened my ears/ eyes and filled my heart on her value and contribution in your life. Your talent in Kavithai form amplifies that further. Kudos! Your Blog is very promising! Good Luck!

  2. Very Nice one Akka, I have always seen your mother full of energy and wondered how she could be so at that age. Getting us a coffee within exactly 5 minutes of our visit was her specialty that myself and KVM used to remember always.

    Your other poems are also simple and good. Keep going…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s